முன்னால் பாக்., அதிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து… பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு..

Default Image
  • நாட்டில் அவசரநிலையை அறிவித்த வழக்கில் தூக்கு தண்டனை வித்திக்கப்பட்டது.
  • இந்நிலையில் இந்த தண்டனையை ரத்து செய்தது லாகூர் உயர் நீதிமன்றம்.

பர்வேஷ் முஷாரப் இராணுவ தளபதியான இவர்  2001 – 2008 வரை, பாகிஸ்தானின் அதிபராக இருந்தபோது, 2007ம் ஆண்டு நாட்டில் திடீரென  அவசர நிலையை அமல் படுத்தினார். இந்த விவகாரம்  தொடர்பாக கடந்த  2013மாண்டு  அவர் மீது, தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இவர் மீது, நாட்டில் தேவையில்லாமல் அவசர நிலையை பிரகடனம் செய்து, தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கியதாகவும்,மேலும் இவர்,  நாட்டிற்கு எதிராக சதி செய்ததாகவும், அவர் மீது குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டது.

Related image

இந்நிலையில் இந்த வழக்கில், பெஷாவர் சிறப்பு நீதிமன்றம்,பாகிஸ்தான் முன்னால் அதிபர் பர்வேஷ் முஷாரப்பிற்கு, தூக்கு தண்டனை விதித்தது. மேலும், அந்த தீர்ப்பில், இந்த தூக்கு தண்டனைக்கு முன்பே பர்வேஷ் முஷாரப் இறந்து விட்டால், அவரது உடலை மூன்று நாள் தூக்கில் தொங்கவிட வேண்டும் எனவும் அந்த  தீர்ப்புரையில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பெஷாவர் சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி முஷாரப் லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில், பாகிஸ்தான் முன்னால் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஐகோர்ட் நீதிபதிகள் ரத்து செய்தனர். இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியல் மட்டுமின்றி உலகையே பேசவைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்