தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் கூட சுமத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கொடுமையானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலையில் மிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து பல நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என வழக்கு தொடரப்பப்ட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொரோனா விதிமுறைகள் தேர்தல் சமயத்தில் முழுமையாக கடை பிடிக்கவில்லை, ஆனால் அதனை சரி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் வர காரணமே தேர்தல் ஆணையத்தின் மெத்தனப் போக்கு இதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றத்தை கூட சுமத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதனால் சமூக வலைத்தளங்களில் இந்திய தேர்தல் ஆணையம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க இது ஒரு காரணமாக அமைந்திருந்தது. இந்நிலையில், கொலைக் குற்றங்கள் சுமத்தலாம் என்ற வார்த்தையை ஊடகங்கள் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் கூட சுமத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கொடுமையானது. நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை செய்தியாக கூடாது என ஊடகங்களை கூறமுடியாது. நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணை பற்றி செய்தி சேகரிப்பும் ஊடக சுதந்திரம் தான் என கூறினர்.
மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கி உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம் மனுவை தள்ளுபடி செய்தது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…