#BREAKING: கொலைக்குற்றம் என கூறியது கடுமையானது.., உச்சநீதிமன்றம்..!

Default Image

தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் கூட சுமத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கொடுமையானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலையில் மிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து பல நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என வழக்கு தொடரப்பப்ட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொரோனா விதிமுறைகள் தேர்தல் சமயத்தில் முழுமையாக கடை பிடிக்கவில்லை, ஆனால் அதனை சரி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் வர காரணமே தேர்தல் ஆணையத்தின் மெத்தனப் போக்கு  இதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றத்தை கூட சுமத்தலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இதனால் சமூக வலைத்தளங்களில் இந்திய தேர்தல் ஆணையம் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க இது ஒரு காரணமாக அமைந்திருந்தது. இந்நிலையில்,  கொலைக் குற்றங்கள் சுமத்தலாம் என்ற வார்த்தையை ஊடகங்கள் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் கூட சுமத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கொடுமையானது. நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை செய்தியாக கூடாது என ஊடகங்களை கூறமுடியாது. நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணை பற்றி செய்தி சேகரிப்பும் ஊடக சுதந்திரம் தான் என கூறினர்.

மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கி உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம் மனுவை தள்ளுபடி செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்