செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் சுசனா சேத் என்பவர் தனது 4 வயது மகனை கொலை செய்து உடலை கொண்டு சென்ற குற்றத்திற்காக கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயது பெண்மணியான சுசனா சேத், பெங்களூருவை அடித்தளமாக கொண்ட மைண்ட்ஃபுல் ஏஐ லேப்ஸ் எனும் AI தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனரான உள்ளார். அவர் நேற்று (திங்கள்) வடக்கு கோவாவிற்கு தனது மகனுடன் சென்றுள்ளார். அங்கு ஒரு விடுதியில் தங்கி இருந்துள்ளார். அவர் அங்கிருந்து டாக்சி மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார்.
பில்கிஸ் பானு வழக்கில், 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
சுசனா சேத் விடுதிக்கு வரும் போது உடன் இருந்த அவரது மகன், திரும்பி செல்கையில் இல்லை என்பதை விடுதி ஊழியர்கள்கண்டறிந்துள்ளனர் . அதன் பின்னர் காவல்துறைக்கு சந்தேகத்தின் பெயரில் புகாரளித்துள்ளனர். அதற்கு முன்னர், கோவாயில் இருந்து விமானத்தில் செல்ல ஊழியர்கள் அறிவுறித்தியபோதும், காரில் செல்லவே சுசனா சேத் விருப்பம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் போலீசார் சுசனா சேத்தை தொடர்பு கொண்டு 4 வயது மகன் பற்றி கேட்கையில், தனது மகன் , நண்பர் ஒருவர் வீட்டில் இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் சுசனா சேத் கூறிய முகவரி மற்றும் தகவல் என்பது போலி என விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கர்நாடகாவில் சித்ரதுர்கா காவல் நிலையத்தில் வைத்து சுசனா சேத்-ஐ காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் , சுசனா சேத் உடமைகளை சோதனை செய்த போது அதில் சூட்கேசில் அவரது 4 வயது மகனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும், கோவா விடுதியில் அவர் தங்கி இருந்த அறையில் ரத்த கரை படிந்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. எதற்காக, எப்போது தனது 4 வயது மகனை சுசனா சேத் கொலை செய்தார், அவர் தான் கொலை செய்தாரா.? என்ன நடந்தது என்பது பற்றி காவல்துறையினர் சுசனா சேத்திடம் கர்நாடகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர்…
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…