பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளி..!
பேஸ்புக் செல்பியால் போலிஸாரின் வலையில் சிக்கிய கொலை குற்றவாளியை கைது செய்த காவல்துறை அதிகாரிகள்.
மைசூரை சேர்ந்த மது என்ற மதுசூதனன் என்பவர் வில்சன் கார்டனுக்கு அருகிலுள்ள லக்கசந்திராவில் 65 வயதான வங்கியாளர் உதய் ராஜ் சிங்கை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரது 6 கூட்டாளிகளுடன் மார்ச் 2014 இவர் கைது செய்யப்பட்டார்.
பின் 2017 நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்றார். அதன்பின் தலைமறைவானார். 2019ஆம் ஆண்டு இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர் நீதிமன்ற விசாரணையை தவிர்த்து விட்டதால் அவரை கைது செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும் ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.
இந்நிலையில் விசாரணையில் மது சிறிதுகாலம் பாட்னாவிலும், பின்னர் பூனேவிலும் வசித்து வந்துள்ளார். சிறு சிறு வேலைகள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான பெயர்களை பயன்படுத்தி இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் சில நாட்களுக்கு முன்பதாக அவரது நண்பரை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். அங்கு இருவரும்பீன்யா அருகே உள்ள மாலுக்கு சென்று செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். அதை மதுவின் நண்பர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆடுகோடி போலீசாரை தொடர்பு கொண்டு மதுவின் புகைப்படம் குறித்து தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த புகைப்படத்தை சரிபார்த்து பீன்யா அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அறிந்து அதை வெளியிட்ட மதுவின் நண்பரை அடையாளம் கண்டுள்ளனர். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மது கைது செய்யப்பட்டுள்ளார்.