கொலை வழக்கு: சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
ஜீவஜோதி என்பவர் சரவணபவன் உணவக மேலாளரின் மகள் ஆவார்.ஜீவஜோதியின் கணவர் பெயரை பிரின்ஸ் சாந்தகுமார் ஆகும். ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் சரவணபவன் உணவகத்தில்வேலையாளாக பணியாற்றி வந்தார்.கடந்த 2001-ஆம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்து கொள்ள சரவணபவனின் உரிமையாளர் ராஜகோபால் விருப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு இடையூறாக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் இருந்ததாக ராஜகோபால் கருதினார்.இதனால் ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை ராஜகோபால் திடீரென ஒருநாள் தனது ஆட்களுடன் கடத்திச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பிரின்ஸ் சாந்தகுமாரின்(ஜீவஜோதியின் கணவர்) உடல் கொடைக்கானலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் போன்றவர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர்.இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.அதேபோல் தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால்.ஆனால் மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றமும் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் தண்டனையை உறுதி செய்தது.
இதனால் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.ஆனால் அரசு சார்பில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டுமென சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ப்பட்டது.பின்னர் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2009-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவு பிறப்பித்தது.
இதனால் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அதில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
இதனால் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை மீண்டும் உறுதியாகியுள்ளது.