சாலையில் எச்சில் துப்பியவருக்கு வினோத தண்டனை வழங்கியுள்ளது சூரத் நகராட்சி.
சூரத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் சிறுநீர் கழித்தல் மற்றும் எச்சில் துப்புதல் போன்ற அசுத்த செயல்களில் ஈடுபடுவோருக்கு சூரத் நகராட்சி வினோதமான தண்டனைகளை வழங்கி வருகிறது. அவர்களுக்கு மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லாமல் அபராதம் விதித்தல் மற்றும் வினோத தண்டனைகளை வழங்குகிறது. இதனால் பொதுமக்கள் சற்று விதிகளை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர் .
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவர் தோப்புக்கரணம் போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அது என்னவென்று பார்க்கையில் சூரத் நகரில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் எச்சில் துப்பியுள்ளார். இதனை கண்ட நகராட்சி அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அவரிடம் போதுமான பணமில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று கேட்டிருக்கிறார், இதனை ஏற்றுக் கொள்ளாத அந்த அதிகாரிகள் தோப்புக்கரணம் போடும் படி சொல்லி இந்த தண்டனையை வழங்கியுள்ளனர்.
இப்படி சில நாட்களுக்கு முன்னர் சாலையை அசுத்தம் செய்த நபருக்கு நகராட்சி நிர்வாகம் சாலை முழுவதையும் சுத்தம் செய்யும் தண்டனையை வழங்கியது .பணம் செலுத்த முடியவில்லை என்றால் அந்த தொகையானது அவர்களுக்கு பெயரில் வரவு வைக்கப்படும்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…