ஜம்மூ காஷ்மீரில் நகராட்சி கவுன்சிலர் மற்றும் பாதுகாவலர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை
சோபூரில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பி.டி.சி உறுப்பினர் மற்றும் நகராட்சி கவுன்சிலர் ரியாஸ் அகமது மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு காவலர் ஷபாத் அகமது மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியதுள்ளது.தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக கலவல்துறையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர்.