கடந்த 46 ஆண்டுகளில் அதிக மழை இந்த வருடம் பெற்றுள்ளதாக மும்பை கொலாபா பகுதி சாதனை!
கடந்த 46 ஆண்டுகளில் இந்த வருடம் தான் மும்பையில் உள்ள கொலாபா பகுதி அதிக மழையை கண்டுள்ளதாக சாதனையை பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இடைவிடாத மழை மற்றும் வெள்ளப் பெருக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மும்பையில் இடைவிடாத மழை பெய்த நிலையில் உள்ளது.
மும்பையில் உள்ள கொலாபா பகுதியில் கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த வருடம் அதிக மழை பெய்து சாதனையை பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவில் 331.8 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாக ஐஐடி அறிவித்துள்ளது. கொலாபாவின் 12 சுற்றுவட்டார பகுதிகளில் 293.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாம்.