கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது. இந்த பருவ மழையானது மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக மகாராஷ்டிரா மாநிலம் முடங்கி போய் உள்ளது .தொடர் மழை காரணமாக மும்பை நகரின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மும்பையில் கனமழை காரணமாக போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்பட்டது. இதனால் 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் மும்பையில் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜூலை 2,4 மற்றும் 5-ஆம் தேதிகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் பகுதியில் அதிகளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…