மும்பையில் சுவர் இடிந்து விபத்து;உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் – பிரதமர் அறிவிப்பு …!

Default Image

மும்பையில் தொடர் கன மழையால் விக்ரோலி பகுதியில் சுவர் இடிந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு  நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மழைக்காலம் தொடங்கிய நிலையில்,மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால்,இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி)கடந்த சனிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.அதன்படி,மும்பை நகரின் பல பகுதிகள் நீர் தேங்கியுள்ளது, பல வீடுகளுக்குள் மழைநீர் நுழைந்துள்ளது.

இந்த நிலையில்,மும்பையில் பெய்து வரும் தொடர் கன மழையால் விக்ரோலி மற்றும் செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால், இடிபாடுகளில் சிக்கி சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து,மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர் (என்.டி.ஆர்.எஃப்) சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.

விக்ரோலியில் நடந்த சம்பவத்தில், ஐந்து பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,இதுகுறித்து,துணை போலீஸ் கமிஷனர் (மண்டலம் 7) பிரசாந்த் கதம் கூறியதாவது: “மும்பையின் விக்ரோலியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து ஐந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் சிலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது” என்று  தெரிவித்தார்.

இதேப்போன்று,செம்பூரில் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என்று பிரஹன்மும்பை மாநகராட்சி (பிஎம்சி) தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி தேசிய நிவாரணத்திலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதற்கிடையில்,இது குறித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் வருத்தம் தெரிவித்தார்.மேலும்,அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்:” செம்பூர் மற்றும் மும்பையின் விக்ரோலி ஆகியவற்றில் பெய்த கனமழையால் பல உயிரிழப்புகள் ஏற்பட்ட செய்திகள் கேட்டு ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கிறேன்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் கிடைக்க விரும்புகிறேன்”, என்று ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay