மும்பை “அண்டர்வேல்ட் டான்” சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!

Published by
Edison

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அண்டர்வேல்ட் டான் சோட்டா ராஜன் உயிரிழந்துள்ளார்.

ராஜேந்திர நிகால்ஜே அல்லது சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் மும்பை அண்டர்வேல்ட் டான்,சமீபத்தில் இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புது தில்லியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்க திங்களன்று வீடியோ கான்ஃப்ரன்ஸில் ராஜனை ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டது. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  சிறைச்சாலை அதிகாரி நீதிமன்றத்திற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து,கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ராஜன் ஏப்ரல் 26 ஆம் தேதி  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி  ராஜன் இன்று உயிரிழந்தார்.

எனினும்,1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு குண்டுவெடிப்பு குற்றம் சாட்டப்பட்ட ஹனிஃப் கடவாலா கொலை வழக்கில் ராஜன் தொடர்புடையவர்.அடுத்ததாக,2018 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் ஜே டேயை 2011 ல் கொலை செய்த வழக்கில் ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இது தவிர,டெவலப்பர் அஜய் கோசலியா மீது 2013 ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்றதற்காக ராஜன் கடந்த மாதம் தண்டனை பெற்றார்.மேலும்,மஹாராஷ்டிராவில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொலை தொடர்பாக குறைந்தது 70 கிரிமினல் வழக்குகளில் ராஜன் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

1 hour ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

1 hour ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

2 hours ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

3 hours ago

கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…

3 hours ago

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

4 hours ago