மும்பை “அண்டர்வேல்ட் டான்” சோட்டா ராஜன் கொரோனா தொற்றால் உயிரிழப்பு..!

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அண்டர்வேல்ட் டான் சோட்டா ராஜன் உயிரிழந்துள்ளார்.
ராஜேந்திர நிகால்ஜே அல்லது சோட்டா ராஜன் என்று அழைக்கப்படும் மும்பை அண்டர்வேல்ட் டான்,சமீபத்தில் இந்தோனேசியாவிலிருந்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புது தில்லியில் உள்ள உயர் பாதுகாப்பு கொண்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில்,மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சோட்டா ராஜன் மீதான வழக்குகளை விசாரிக்க திங்களன்று வீடியோ கான்ஃப்ரன்ஸில் ராஜனை ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டது. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி நீதிமன்றத்திற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து,கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக ராஜன் ஏப்ரல் 26 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி ராஜன் இன்று உயிரிழந்தார்.
எனினும்,1993 ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டு குண்டுவெடிப்பு குற்றம் சாட்டப்பட்ட ஹனிஃப் கடவாலா கொலை வழக்கில் ராஜன் தொடர்புடையவர்.அடுத்ததாக,2018 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் ஜே டேயை 2011 ல் கொலை செய்த வழக்கில் ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இது தவிர,டெவலப்பர் அஜய் கோசலியா மீது 2013 ஆம் ஆண்டு கொலை செய்ய முயன்றதற்காக ராஜன் கடந்த மாதம் தண்டனை பெற்றார்.மேலும்,மஹாராஷ்டிராவில் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் கொலை தொடர்பாக குறைந்தது 70 கிரிமினல் வழக்குகளில் ராஜன் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.