மும்பை தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 60ஆக உயர்வு.!
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில், அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் 2687 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 178 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இம்மாநிலத்தில், மும்பை மாநகரில் மக்கள் நெருக்கம் அதிகம் இருக்கும் தாராவி பகுதியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
அங்கு தற்போது மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் தாராவி பகுதியில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. 7 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.