மும்பையில் தமிழ்ப் புத்தாண்டு தினம் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். வாட்ஸ்அப் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து செய்திகளை பகிர்ந்தனர். தமிழ்ப் புத் தாண்டையொட்டி தமிழர்கள் நிர்வகிக்கும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
அனைத்து கோவில்களிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.தமிழர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
செம்பூர் செட்டா நகர் முருகன் கோவில்,மாட்டுங்கா லேபர்கேம்ப் கணபதி தணிகைவேல் முருகன் கோவில், மாட்டுங்கா ஆஸ்திக சமாஜ் உள்ளிட்ட அனைத்து தமிழர் பகுதி கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பக்தர்கள் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பாக அமைய சாமியிடம் வேண்டிக் கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…