மும்பையில் 55வயதிற்கு மேலாக இருக்கும் காவலர்கள் வேலைக்கு வரவேண்டாம் !
மும்பையில் 55வயதிற்கு மேலாக இருக்கும் காவலர்கள் வேலைக்கு வரவேண்டாம் என்று மும்பை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் 29974 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 937 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 7027 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மேலும் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்தியவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 8590 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 369 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் கொரோனா தாக்கம் பெருமளவில் உள்ளது.
இந்நிலையில், மும்பையில் 55 வயதிற்கு மேற்பட்ட 3 போலீசார்கள் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். மேலும் 107 போலீசார்களுக்கு தொற்று உறுதி செய்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மும்பையில் 55வயதிற்கு மேலாக இருக்கும் காவலர்கள் வேலைக்கு வரவேண்டாம் என்று மும்பை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.