மும்பை மாநகரம் , முல்லூண்டு பகுதியில் வசித்து வந்த பாபு என்கிற திருமணமான நபர், அப்பகுதியில் உள்ள 18 வயது இளம் பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்துள்ளார். இதனை அறிந்த அப்பெண்ணின் தாயார், பாபுவை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி பாபு வீட்டில் இருந்து புறப்பட்டு பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாபுவின் குடும்பத்தார் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் போலீசார் பாபுவை தேடினர்.
இந்நிலையில் பாபுவின் உடல் தானே பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை பாபுவின் மனைவி அடையாளம் காட்டிவிட்டார்.
பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு பல தகவல்கள் கிடைத்தது. அதாவது, பாபு தொடர்பு வைத்திருந்த அப்பெண்ணின் தாயார், 4 பேருடன் சேர்ந்து, பாபுவை ஆட்டோவில் கடத்தி கொலை செய்தது அம்பலமானது. இதனை தொடர்ந்து 18வயது இளம்பெண்ணின் தயார் கீதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும் கொலையில் சம்பந்தப்பட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…