மும்பையில் கோர விபத்து… நள்ளிரவில் தாறுமாறாக சென்ற பேருந்து மோதியதில் 4 பேர் பலி, 25 பேர் படுகாயம்!
விபத்து நடந்த உடனேயே அப்பகுதி மக்கள் பேருந்து டிரைவர் சஞ்சய் மோரே பிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை: மும்பையின் குர்லா பகுதியில் அதிவேகமாக வந்த பெஸ்ட் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியது. தகவலின்படி, குர்லாவில் இருந்து அந்தேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து அம்பேத்கர் நகரில் உள்ள புத்தர் காலனி அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
நேற்று (திங்கள்கிழமை) இரவு 10.45 மணியளவில் இந்த விபத்து நடந்த இருப்பது தெரிய வந்துள்ளது. விபத்தையடுத்து, அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 29 பேர் காயமடைந்தனர். மேலும், காயமடைந்தவர்கள் பாபா மருத்துவமனை, சியோன் மருத்துவமனை மற்றும் செவன் ஹில்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக, பேருந்தின் ஓட்டுநர் சாரதி சஞ்சய் மோரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 1ம் தேதி தான் பணியில் சேர்ந்தார். குர்லா காவல்நிலையத்தில் அவர் மீது குற்றமற்ற கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனுடன், குற்றம் சாட்டப்பட்ட டிரைவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருக்கிறதா, இல்லையா என்பதும் பரிசோதிக்கப்படும்.
ஆனால் அவர் குடிபோதையில் இருக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பிரேக் பழுதானதால் டிரைவரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்ததாகவும், இதனால் பயந்து போன டிரைவர், பிரேக்கிற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். இதனால் பேருந்தின் வேகம் அதிகரித்தது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.