1,00,000-க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பதுக்கிய நபர் கைது
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் மத்திய , மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதில் ஒன்றாக தான் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு.
இதையெடுத்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க கடைகளுக்கும் , மார்க்கெட்க்கும் செல்லும்போது கண்டிப்பாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என மத்திய , மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
மேலும் கொரோனா வைரசால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் கிருமி நாசினி மற்றும் முகக்கவசங்களை மத்திய அரசு அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் இணைத்துள்ளது. இதனால் கிருமி நாசினி மற்றும் முகக்கவசங்களை பதுக்குவதும் , அதிக விலைக்கு விற்பது குற்றம் எனவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அனைவரும் அதிகமாக கிருமி நாசினி மற்றும் முகக்கவசங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சிலர் இதை பயன்படுத்தி கொண்டு போலி கிருமி நாசினி தயாரிப்பது , முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பது , பதுங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையெடுத்து போலீசார் அவ்வப்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் மும்பையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பதுக்கியவர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த முகக்கவசங்களின் மதிப்பு ரூ.35.84 லட்சம் என கூறப்படுகிறது. இதையெடுத்து மும்பை போலீஸ் முகக்கவசங்களை பதுக்கியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.