பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்திருந்தார் கங்கனா ரனாவத். மும்பையை மினி பாகிஸ்தான் என விமர்சித்தது சர்ச்சை ஆன நிலையில், அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனிடையே, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசிய நடிகை கங்கனா ரனாவத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத், கங்கனா ரனாவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் நடிகையின் அவமானகரமான அறிக்கைகளுக்கு பின்னர் அவருக்கு மும்பையில் வாழ உரிமை இல்லை என்று கூறி இருந்தார். கங்கனா ரனாவத்துக்கு எதிராக ஒரு சில கட்சியினர் போரட்டமும் நடத்தினர்.
இதற்குப் பதில் அளித்திருக்கும் கங்கனா மும்பைக்கு நான் திரும்ப வர வேண்டாம் எனப் பலரும் அச்சுறுத்துவதைப் பார்க்க முடிகிறது. எனவே, வரும் வாரம் செப்டம்பர் 9-ம் தேதி அன்று நான் மும்பைக்கு வர முடிவெடுத்துள்ளேன். மும்பை விமான நிலையத்தை நான் அடையும் நேரத்தைப் பகிர்கிறேன். முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள் என்று கங்கனா கூறியிருந்த நிலையில், தற்போது ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…