மும்பை-கர்நாடகா பகுதிக்கு ‘கிட்டூர் கர்நாடகா’ என பெயர் மாற்றப்படும் : முதல்வர் பசவராஜ் பொம்மை!
மும்பை-கர்நாடகா பகுதிக்கு ‘கிட்டூர் கர்நாடகா’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் உருவாகி 65 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டி கர்நாடகாவில் நேற்று கர்நாடக ராஜ்யோட்சவா எனும் பெயரில் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள், மும்பை கர்நாடக பகுதிக்கு இன்னும் பழைய பெயரையே வைத்து இருப்பதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. மேலும் அப்பகுதியில் எல்லை பிரச்சனையும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
எனவே இந்த பகுதிக்கு கிட்டூர் கர்நாடகா என விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பெல்காவி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மராத்தி மொழி பேசக்கூடிய மக்கள் அதிகம் இருப்பதால் அப்பகுதியை மராட்டிய மாநிலத்துடன் இணைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும், ஏற்கனவே ஹைதராபாத் கர்நாடக பகுதிக்கு கல்யாண கர்நாடகா என பெயர் சூட்டி உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.