விசாரணையை நிறுத்த முடியாது.., மும்பை ஐகோர்ட் திட்டவட்டம்..!
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சனை பற்றி வழக்கு விசாரணை தொடரும் என்று மும்பை ஐகோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றங்களில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு ஆக்சிஜன், தடுப்பூசி வழக்குகள் மாற்றப்படும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. ஆனால், மும்பை ஐகோர்ட் ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனை தொடர்ப்பான வழக்குகளை தொடர்ந்து விசாரித்து வருகிறது.
இதனால், ஆக்சிஜன், தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்சனையை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிப்பதாக அரசு வழக்கறிஞர் கூறினார். இதைத்தொடர்ந்து, ஆக்சிஜன் பற்றாக்குறை தற்போது மிகவும் முக்கியமான பிரச்சினை. உச்சநீதிமன்றம் விசாரித்தாலும் தங்கள் விசாரணை தொடரும் என்று மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் தடை விதிக்கும் வரை விசாரணை தொடரும் என்றும் மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதி தீபங்கர் தெரிவித்துள்ளார்.