அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து, ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையிலேயே இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
அன்வை நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதன்காரணமாக மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து, மும்பையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
மேலும் அர்னாப்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த அவரை நேற்று காலை போலீஸ் வேனில் தலோஜா மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை அழைத்துச்சென்ற வேனின் ஜன்னல்களை சுற்றி கருப்பு நிற திரையால் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவின் விசாரணை இன்று எஸ்.எஸ்.ஷிண்டே, எம்.எஸ்.கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையிலேயே இருக்குமாறும், மாறாக கோஸ்வாமி ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அர்னாப் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…