கங்கனாவின் கட்டிடத்தை இடிக்க மும்பை நீதிமன்றம் இடைக்காலத் தடை!

அத்துமீறி கட்டப்பட்டதாக பாலிவுட் நடிகை கங்கனாவின் அலுவலகம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் கட்டடங்களை இடிக்க மும்பை நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையானதையடுத்து, அவருக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவதுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன்காரணமாக, பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டதால், நோட்டீஸ் ஒட்டப்பட்டு, கங்கனா ரனாவத்தின் அலுவலகம் இடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கங்கனா ரனாவத், மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், அவரின் மனுவிற்கு மும்பை மாநகராட்சி (BMC) பதிலளிக்குமாறும், கங்கனாவின் கட்டடங்களை இடிக்க இடைக்கால தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025