மும்பையில் 15 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவிலான ஒலி மாசு பதிவு.!

Default Image

ஆவாஸ் அறக்கட்டளை என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம், “இந்த ஆண்டு தீபாவளியின்போது மும்பையில் பதிவு செய்யப்பட்ட ஒலி மாசு அளவு கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவாக மிகவும்  குறைந்துள்ளது என்று கூறியுள்ளது.

பட்டாசு வெடிப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது மற்றும் மாநில அரசின் கடுமையான வழிகாட்டுதல் ஆகியவையின் காரணமாக மும்பையில் ஒலி மாசு அளவு குறைந்துள்ளது என்று ஆவாஸ் அறக்கட்டளையின் நிறுவனர் சுமைரா அப்துலலி கூறினர்.

இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறிக்கைப்படி, சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10 வரையும், பின்னர் மறுநாள் காலை (ஞாயிற்றுக்கிழமை) வரை சத்தம் அளவு அளவிடப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் சில இடங்களில் இரவு 10 மணிக்குப் பிறகு பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற தடை மீறப்பட்டதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மும்பையில் அதிகபட்ச இரைச்சல் அளவுகள் 2019 இல் 112.3டெசிபல், 2018 இல் 114.1 டெசிபல், மற்றும் 2017 இல் 117.8 டெசிபல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முழு மும்பைக்கும் டெசிபல்களை துல்லியமாக அளவிடுவது கடினம் என்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்