மும்பை மற்றும் கோவாவில் கோலாகலமாக நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள்!

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா கொள்ளைகளமகா அடுத்த வாரம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா, இந்தியாவில் வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும், மும்பை மாநகரில் உள்ள கிர்கவ்ம் சௌபாட்டி எனும் கடற்கறை இடத்தில் மட்டும் 10 நாட்களுக்கு மேலாக பூஜை செய்யப்பட்ட சுமார் 10,000 விநாயகர் சிலைகள் அங்கு கரைக்கப்படும்.
அதே போல கோவாவில் கிருஸ்தவர்கள் அதிகம். இருந்தும் இங்கு விநாயகர் சதுர்த்தி வாணவேடிக்கைகளோடு மிகவும் கோலாகலமாக இந்த விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். கோவாவில் சதுர்த்திக்கு அடுத்த நாள் நவ்யசி பஞ்சம் எனும் அறுவடை திருவிழா கொண்டாட படுகிறதாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025