மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவு.
மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள பாட்டியா மருத்துவமனை அருகே அமைந்துள்ள 20 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 18 வது மாடியில் இன்று காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. இதனையடுத்து, தீ அணைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தாகவும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், மும்பையின் டார்டியோ பகுதியில் உள்ள கட்டட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் PMNRF நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு பிரதமர் மோடி அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
An ex-gratia of Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives due to the building fire in Tardeo, Mumbai. The injured would be given Rs. 50,000 each: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 22, 2022