ஆபாச பட வழக்கில் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கிய மும்பை நீதிமன்றம்!

Default Image

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ராஜ் குந்த்ராவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவுக்கு ரூ.50,000 உத்தரவாதம் தொகை விதித்து மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகளில் வெளியிட்டதாக ஜூலை 19 அன்று ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் இரண்டு மாதங்கள் நீதிமன்றக் காவலில் இருந்தார். இதையடுத்து, கடந்த 15ம் தேதி ராஜ் குந்த்ரா உட்பட 4 பேர் மீது 1,467 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது. காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜ் குந்த்ராவுக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த வழக்கு பிப்ரவரியில் பதிவு செய்யப்பட்டதில் இருந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
CSK vs RCB RCB
bumrah MI
Sardar2
Nitish Kumar woman at event sparks row
tamilisai soundararajan about tvk vijay
virender sehwag ms dhoni