இதுவரை கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடமிருந்து 11.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூல் – மும்பை மாநகராட்சி!
மும்பை மாநகராட்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடமிருந்து இதுவரை 11.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒரு வருட காலமாக இந்தியாவையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு இருந்தாலும் மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சில விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் அலட்சியத்தால் கொரோனா அதிகரித்துக்கொண்டே செல்வதால் இந்த விதிமுறைகளை மக்கள் பின்பற்றுவதற்காக சில அபராதங்களும் அவ்வப்போது விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மும்பை மாநகராட்சியில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து இதுவரை 11.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 11,046 பேர் முகமூடி அணியததற்காகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததற்க்காகவும் அபராதம் கட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.