மும்பை : ஒரே நாளில் 751 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 7625ஆக உயர்வு !
மும்பை : ஒரே நாளில் 751 பேருக்கு கொரோனா உறுதி ! பாதிப்பு எண்ணிக்கை 7625ஆக உயர்வு !
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 35,365 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 9065 பேர் குணமடைந்து உள்ளனர். இதுவரை 1152 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் மகாராஷ்டிரா கொரோனா பாதிப்பில் முதலில் உள்ளது. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 11506ஆக உயர்ந்துள்ளது. நேற்று(மே 1) ஒரே நாளில் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் 751 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7625ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நேற்று மட்டும் 95 பேர் குணமடைந்துள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.