மும்பையில் நேற்றைய கொரோனா வேட்டையில் 441 பேர் சிக்கியுள்ளனர் !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 40, 236ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,307ஆக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 12,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் நேற்று (மே3) மட்டும் 441 பேருக்கு கொரோனா உறுதி, 100 பேர் குணமடைந்துள்ளனர், 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை 8613 ஆக உயர்ந்துள்ளது. 343 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025