பிவாண்டி 3 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு… மீட்பு பணி தீவிரம்…

Default Image

பிவாண்டி 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்வு.

மஹாராஷ்டிரா மாநிலம் பிவாந்தியில் உள்ள ஜிலானி என்ற 3 அடுக்குமாடி குடியிருப்பு நேற்று (செப்டெம்பர் 21) அதிகாலை 3.20 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த துயர  சம்பவம் அதிகாலை நடந்தது என்பதால் அதில் வசித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளனர். இதில் நேற்று 8 பேர் பலியாகி இருந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 20க்கும் மேற்பட்டோ் இடிபாடுகளிலி்ருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த கட்டிடம் 1984ம் ஆண்டு  கட்டப்பட்ட கட்டடம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த  பிவாண்டி 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. 4 வயது குழந்தை உட்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக தொடர்ந்து  நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gnanasekaran Anna University
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)