பிவாண்டி 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்வு.
மஹாராஷ்டிரா மாநிலம் பிவாந்தியில் உள்ள ஜிலானி என்ற 3 அடுக்குமாடி குடியிருப்பு நேற்று முன் தினம் (செப்டெம்பர் 21) அதிகாலை 3.20 மணியளவில் இடிந்து விழுந்தது. இந்த துயர சம்பவம் அதிகாலை நடந்தது என்பதால் அதில் வசித்த குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளனர். இதில் விபத்து நடந்த அன்று 8 பேர் பலியாகி இருந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் மீட்புப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று வரை 20க்கும் மேற்பட்டோ் இடிபாடுகளிலி்ருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த கட்டிடம் 1984ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடம் என கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த மீட்புப் படையினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை வரையில் 21 சடலங்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்றுவரை 33 ஆக இருந்த உயிரிழப்பு தற்போது 41ஆக் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…