மும்பை தாக்குதல் வழக்கில் கைதான, பயங்கரவாதி தஹவூர் ராணாவை, நாடு கடத்த அனுமதித்த அமெரிக்கா டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று தெரிவித்துள்ளது.
கடந்த, 2008ல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர். இந்த சதி திட்டத்திற்கு லஷ்கர் – இ – தொய்பா, ஹர்கத் – உல் – ஜிஹாத் – இ – இஸ்லாமி பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பில் இருந்ததாக அமெரிக்காவில் வசிக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த, டேவிட் ஹெட்லி, தஹவூர் ராணா ஆகிய இருவர் உதவியதாக அவர்கள் விசாரணை வளையத்திற்குள் வந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் அப்ரூவர் ஆக மாறினார், டேவிட் ஹெட்லி இதனால் அவர்க்கு 35 ஆண்டுகள்; தஹவூர் ராணாவுக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனையானது விதிக்கப்பட்டது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு காரணமாக ராணா விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட நபர் மேல் பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும் அந்த நபரை நாடு கடத்துமாறு, அமெரிக்காவை, இந்தியா கேட்டுக்கொண்டது. இந்தியா கேட்டுக் கொண்டதன் விளைவாக மீண்டும் ராணா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர், ஜாமின் கோரி, லாஸ் ஏஞ்செல்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினத்தில் விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்டராணாவுக்கு ஜாமின் வழங்க கூடாது காரணம் கனடா குடியுரிமை பெற்றுள்ளார்.அவ்வாறு ஜாமீன் வழங்கும்பட்சத்தில் தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது இதனால் நாடு கடத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால், ஜாமின் வழங்கக் கூடாது என்று துணை அட்டர்னி ஜெனரல், ஜான் லுலிஜியன் வாதாடினார்.
அப்போது, ராணாவின் வழக்கறிஞர், ”டேவிட் ஹெட்லியை நாடு கடத்தாமல், ராணாவை மட்டும் இந்தியாவுக்கு நாடு கடத்துவது சட்டப்படி செல்லாது அதனால் ஜாமின் வழங்கலாம்,என்று தெரிவித்தார்.ஆனால் பயங்கரவாதிகளுக்கு உதவிய வழக்கில் டேவிட் ஹெட்லி குற்றத்தை ஒப்புக் கொண்டார், ஆனால், ராணா, கடைசிவரை குற்றத்தை மறுத்து, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தார். அதனால், ராணாவை நாடு கடத்தலாம்.ஆனால் ஹெட்லிக்கு அளித்த வாக்குறுதிப்படி, அவரை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என, ஜான் லுலிஜியன் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் தள்ளி வைத்து உத்தரவிட்டது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…