மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் சிக்கல் ..!
மிகவும் எதிர்பார்க்கப்படும் மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானுடன் இணைந்து 98 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கான நிலத்தை 2019 ஆம் ஆண்டிற்குள் கையகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மகாராஷ்ட்ரா மாநிலத்தில், பழங்குடியின சமூகத்தினர் வசிக்கும் 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இத்திட்டத்திற்குத் தேவையான நிலத்தைத் தர மறுத்து வருவதால், திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.
சந்தை மதிப்பை விட 5 மடங்கு அதிகமாக இழப்பீடு தருவதாக கூறியும், நில உரிமையாளர்கள் அதனை ஏற்க மறுத்து வருவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.