ட்விட்டர் மூலம் போலீசாரின் உதவியை நாடிய மனைவி! சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோ….
ட்விட்டர் வீடியோ மூலம் மும்பையில் உள்ள ஹார் பகுதியை சேர்ந்த பெண், தன் கணவனின் கொடுமைகளை, போலீசாருக்கு தெரிவித்த அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பெண், தனது குடும்பத்தினருடன் ஹார் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக அப்பெண், அவரது மகளுடன் 12 வது மாடியிலும், மற்ற இரு குழந்தைகளுடன், கணவர் 11 வது மாடியிலும் வசித்து வருகின்றனர்.
எனினும், தன் கணவனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், அவரது கணவன் அவரை மனதளவிலும் மற்றும் உடலளவிலும் மிகவும் கொடுமைப்படுத்துவதாகவும் தனக்கு நீதி வேண்டும் எனவும் அழுதுகொண்டே வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
அப்பெண்ணின் வீடியோவை, திரைப்பட இயக்குநர் அஷோக் பண்டிட் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். வீடியோவை பார்த்த போலீசார், அப்பெண்ணின் கணவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே, தனது கணவன் மீது அப்பெண் இரண்டு வழக்குகள் பதிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்