முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு; கேரள அரசு மீண்டும் மனு.!
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்க கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில்லாத பகுதியில் இருப்பதாக கேரள அரசு, தனது மனுவில் கூறியுள்ளது. அணையில் நீர்மட்டம் 136 அடிக்கு மேல் இருக்கும் பொழுது அது ஆபத்தை விளைவிக்கும் என்று கேரள அரசு தனது மனுவில் கூறியிருக்கிறது.
இதனால் முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அணையின் கட்டுமானம், நிலத்தின் அமைப்பு, நிலநடுக்கம் சார்ந்து இந்த ஆய்வு இருக்கவேண்டும் எனவும், ஆய்வில் இரு மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டு ஆய்வின் முடிவை மாநிலங்களுக்கு வழங்கவேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.