முல்லை பெரியாறு விவகாரம் – தமிழக அதிகாரிகளை அனுமதிக்க கேரளாவுக்கு உத்தரவு!
முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணி செய்ய கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவு.
முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ள தமிழக அதிகாரிகளை அனுமதிக்க கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணி செய்ய கேரள அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி 2 வாரத்தில் 2 அரசுகளும் பிராமண பாத்திரம் தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளனர்.
மேலும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த மனுக்கள் தொடர்பாக 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்ல வல்லக்கடவு – முல்லைப் பெரியார் காட்டுச் சாலையை பயன்படுத்த அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பு கோரிக்கை வைத்திருந்த நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது.