அம்பானி இல்ல திருமணத்தில் திருட்டு..! திருச்சியை சேர்ந்த 5 பேர் அதிரடி கைது

Ambani Family Wedding: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவின் போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் ஜூலை மாதம் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது, பிரபல தொழிலதிபர் விரேன் மெர்சென்டின் மகளான ராதிகாவை அவர் மணக்கவுள்ளார்.

Read More – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன்!!

திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் கடந்த 1-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த மூன்று நாள் நிகழ்ச்சிக்காக ரூ.1200 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.

Read More – மக்களவை தேர்தல்: குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சுகாதாரம்..! தொழிலாளர்களுக்கான காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்

இந்த நிலையில், ஆனந்த் அம்பானி திருமண நிகழ்வின்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக திருச்சியை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்பானி இல்ல திருமணத்திற்கு வந்திருந்தவரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம், லேப்டாப் போன்றவை திருடப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் திருச்சியை சேர்ந்த 5 பேரை டெல்லியில் வைத்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested