உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி.
முகேஷ் அம்பானி என்ற பெயர் அனைவரும் அறிந்ததே ஆகும். ஆசியா மற்றும் இந்தியாவை பொருத்தவரை முதல் பணக்காரராக இருந்து வந்தார்.ஆனால் சமீப காலமாக கச்சா எண்ணையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த காரணத்தால் அம்பானியின் செல்வாக்கும் சரிந்தது.இதனால் ஆசியாவில் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை இழந்து இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்தியாவை பொருத்தவரை கொரோனா காலத்தில் பெரும் நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றது.இந்த சமயத்தில் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் 24.17 % பங்குகளை விற்றார்.இதன் பங்குகளை உலகின் முன்னணி நிறுவனங்களாக உள்ள ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ரூ.1,15,693.95 கோடிக்கு வாங்கியது.இதன்விளைவாக அம்பானியின் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது.மொத்தம் 70.1 பில்லியன் டாலராக சொத்து அதிகரித்தது. இதன் மூலம் கடன் இல்லாத நிறுவனமாக அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாறியது.ஏற்கனவே அம்பானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்கு இருந்தார்.
இந்நிலையில் தற்போது அம்பானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்ஸ் தெரிவித்துள்ளது .இதனால் உலகின் பெரும் முதலீட்டாளராக கருதப்படும் வாரன் பஃபெட் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு 67.8 பில்லியன் டாலராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுளள்து.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…