முறைகேடாக பங்கு வர்த்தகம்…முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்..!
கடந்த 2007–ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனம் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 4.1 % பங்குகளை பங்குவர்த்தகத்தை பாதிக்கும் வகையில் அது வீழ்ச்சி அடைந்த நேரத்தில் வாங்கி விற்பனை செய்திருந்தது இது செபி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் மேலும் இரண்டு நிறுவனங்களுக்கும் செபி அபராதம் விதித்துள்ளது. இதன்படி, முகேஷ் அம்பானிக்கு செபி ரூ .15 கோடியும், முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு ரூ .25 கோடியும் அபராதம் விதித்துள்ளது. இதனால்,முகேஷ் அம்பானிக்கு ரூ .40 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவி மும்பை செஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .20 கோடியும், மும்பை செட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ .10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, முகேஷ் அம்பானி உலகின் முதல் பணக்காரர் என்ற பட்டியலில் இருந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.