சிஎஸ்கே கேப்டன் தோனி பப்ஜி விளையாட்டை அதிகம் விரும்புவதாக தோனியின் மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி வீடியோ கேம் விளையாட்டுகளை அதிகம் விரும்புவதாகவும் குறிப்பாக பப்ஜி விளையாட்டை விரும்புவதாக தோனியின் மனைவி சாக்ஷி தெரிவித்துள்ளார். இந்த விளையாட்டிற்கு தோனி அடிமையாகிவிட்டதாகவும், அந்த விளையாட்டுடனே தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிஎஸ்கே தொடர்பான உரையாடலின் பொழுது சாக்ஷி, தனது கணவர் எப்போதும் சுறுசுறுப்பான மனதை வைத்திருப்பதாகவும், அது நல்லது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
உங்களுக்கே தெரியும் மஹிக்கு அதிகமாக சிந்திக்கக்கூடிய மூளை. அது எப்போதும் ஓய்வெடுக்காது. அதனால் அவர் கால் ஆப் டியூட்டி அல்லது பப்ஜி போன்ற விளையாட்டுகளை அதிகம் விளையாடுகிறார். இது இவரது மனதை திசைதிருப்ப உதவுகிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த பப்ஜி விளையாட்டு தோனி படுக்கையறைக்கு அழைத்துவந்துவிட்டார். அவர் என்னுடன் பேசுகிறார் என்று நினைப்பேன், ஆனால் அவர் ஹெட்போன்களில் விளையாடும் மற்ற நபர்களிடம் பேசிக்கொண்டிருப்பார்.
தூங்கும் போதும் பப்ஜியை பற்றி நினைத்து கொண்டு தூங்குவதாகவும் கூறியுள்ளார். தற்போது இந்த இடைநிறுத்தப்பட்ட இந்த சீசன் ஐபிஎல் 2021 மீண்டும் தொடங்கும் பொழுது சிஎஸ்கேவை தோனி முன்னிலைப்படுத்துவார் என்றும் இம்முறை சென்னை அணி நல்ல வடிவத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…