எம்பிக்கள் பதவி காலம் நிறைவு! ஜூலை 24ம் தேதி தேர்தல் – இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

election commission of india

10 மாநிலங்களவை எம்பிக்கள் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், ஜூலை 24ம் தேதி தேர்தல் அறிவிப்பு. 

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட 10 எம்பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதில், கோவா (1), குஜராத் (3), மேற்கு வங்கம் (6) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் டெரிக் ஓ பிரையன், டோலோ சென், சுஷ்மிதா தேவ், சாந்தா சேத்ரின் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும் சுகந்த சேகர் ராய், காங்கிரஸ் எம்பி பிரதீப் பட்டாச்சார்யா உட்பட 10 பேரின் பதவிக்காலம் ஜூலை, ஆகஸ்டில் முடிவடைகிறது. இதனால், இந்த இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லுசின்ஹோ, தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூலை 24ம் தேதி அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Rajyasabha Election
[Image Source : Twitter/@sunnewstamil]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்