ஸ்மார்ட் போன்களில் தற்காலத்து இளைஞர்கள் பெரியவர்கள் என பலரால் ஈர்க்கப்பட்டு பரவலாக விளையாடப்படும் கேம் பப்ஜி. இந்த விளையாட்டினால் மன அழுத்தம் ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட குற்றச்செயல்கள் என பல அரங்கேறியுள்ளன. அப்படி ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி ஒரு இளைஞனின் உயிரை பறித்துவிட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில், குவாலியர் எனும் இடத்தில் இருந்து ஆக்ரா வரை ரயிலில் இரு இளைஞர்கள் பயணித்துவந்துள்ளனர். அதில் ஒருவர் பெயர் சவுரப் யாதவ். இவர் தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் பயணித்துள்ளார். சந்தோஷ் சர்மா நகை தொழிலாளி. அவர் நகையை கழுவ ஆசிட் எடுத்து தனது பையில் வைத்திருந்துள்ளார்.
சவுரப் யாதவ், ரயிலில் பப்ஜி விளையாடிகொண்டு வந்துள்ளார். அப்போது அவருக்கு தாகம் எடுத்துள்ளது. உடனே நண்பர் பையில் வைத்திருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து எடுத்து குடித்துவிட்டார். உடனே தொண்டை வழியில் துடித்துள்ளார். இதனை அறிந்த சக பயணிகள் உடனே ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலிஸ் விசாரித்து வருகிறது. இறந்த இளைஞனின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…