பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு சைக்கிளில் வந்த எம்.பி!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்.பி சைக்கிளில் வந்து உள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து, அவையை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில ராஜ்யசபா எம்பி ரிபுன் போரா அவர்கள் சைக்கிளில் வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் அவரது சைக்கிளின் முன் புறம் பெட்ரோல், டீசல் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இதன் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலை உயர்வு பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என தாங்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும், நாடாளுமன்றத்தில் ஒரு எம்பியாக இது பற்றி விவாதம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றால், இந்த விவகாரங்களை நாங்கள் எங்கு எழுப்புவோம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.