இந்த மாநிலத்தில் அரசே கோழிக்கறி, முட்டை, பால் விற்பனையை தொடங்கிவிட்டது!
மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது மாநில அரசே கோழிக்கறி, கோழி முட்டை, பால் போன்றவற்றை விற்க தொடங்கியது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. கமல்நாத் முதல்வராக இருக்கிறார்.
அம்மாநில கால்நடை துறை அமைச்சர் லகான் சிங் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாநிலம் முழுவதும் அரசு சார்பில் இறைச்சி, முட்டை, பால் போன்றவற்றை விற்பனை செய்ய விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு சத்துக்கள் நிறைந்த கதகநாத் வகை கோழி இறைச்சியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
அரசே இறைச்சி விற்பதா இது மதவாதத்தை தூண்டும் செயல் என பாஜக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.