நமது வீட்டிலும் கழிவறை குளியலறை உள்ளதால் உறவினர்கள் சாப்பிடாமல் போய்விடுவார்களா?! மத்திய பிரதேச அமைச்சர் சர்ச்சை பேச்சு!
மத்திய பிரதேச அமைச்சர் இமார்த்தி தேவி , அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை என கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மத்திய [பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சமையல் செய்யும் இடத்தின் அருகில், கழிவறை இருப்பதும், அந்த கழிவறை மேட்டில் சமைப்பதற்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதும், அந்த புகைப்படம் வெளியாகி [பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து மத்திய பிரதேச அமைச்சர் இமர்த்தி தேவி கூறுகையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை. நமது வீட்டிலும் கழிவறை, குளியலறை உள்ளது. அதற்காக நமது வீட்டில் நமது உறவினர்கள் சமைக்காமல் இருந்து விடுகிறார்களா என கேள்வி எழுப்ப்பியுள்ளார்
மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.