ம.பி: 250 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொடுத்தற்காக தலை குனிந்து வணங்கி நன்றி தெரிவித்த அமைச்சர்..!

Default Image

ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மத்தியில்,தனியார் நிறுவனம் ஒன்று ஆக்ஸிஜன் வழங்கியதற்காக மத்திய பிரதேச எரிசக்தி அமைச்சர் பிரதும்ன்யா சிங் தோமர் தலை குனிந்து வணங்கி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச எரிசக்தி மந்திரி பிரதும்ன்யா சிங் தோமர்,ஏப்ரல் 24 ஆம் தேதியன்று மலான்பூரில் உள்ள சூர்யா என்ற தனியார் நிறுவனத்திடம்,மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது குறித்து கலந்துரையாடினார்.

இதைத் தொடர்ந்து சூர்யா நிறுவனம் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுகொண்டது.அதன்பிறகு,நிறுவனம் தங்கள் ஆலையை மூடிவிட்டு குவாலியர், பிந்த் மற்றும் மோரேனா ஆகிய நகர்ப்புற பகுதிகளுக்கு 250 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியது.இதன் காரணமாக அமைச்சர் பிரதும்ன்யா சிங் தோமர்,உடனே தலை குனிந்து வணங்கி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

அதன் பின்னர் இதுகுறித்து தோமர் கூறுகையில்,”நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் இந்த சூழலில்,சூர்யா நிறுவனம் தங்கள் ஆலையை மூடிவிட்டு 250 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்து,மனிதகுலத்திற்கு மிக முக்கியமான சேவை பணிகளைச் செய்திருக்கிறது.

இதைப் போல மற்ற நிறுவனங்களும்,அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்க உதவ முன்வர வேண்டும்”,என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து,சூர்யா நிறுவனம் ஆக்ஸிஜன் வழங்கியதற்காக மத்திய பிரதேச எரிசக்தி அமைச்சர் பிரதும்ன்யா சிங் தோமர் தலை குனிந்து வணங்கி நன்றி தெரிவித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்