மத்தியப்பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூரில் மனைவியை சாலையில் வைத்து குச்சியால் அடித்து தாக்கியுள்ளார் கணவர்.
மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் தனது மனைவி ஒரு பையனுடன் தனியாக இருப்பதைக் கண்ட கணவன், அந்த மனைவியை குச்சியால் அடித்து தாக்கியுள்ளார். அங்குள்ள சோண்ட்வா போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் செப்டம்பர் 10-ஆம் தேதி சாலையின் நடுவில் வைத்துஅடித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து போலீசார் 6 பேரை கைது செய்தனர். முதலில், அவர் தனது மனைவியை தனது வீட்டை விட்டு வெளியே இழுத்துள்ளார். பின்னர் அவளுடன் தனியாக இருந்த பையனையும் வெளியே கொண்டு வந்துள்ளார். அவர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
அந்த பெண்ணின் மாமியார், பெண் மற்றும் பையனை அடிக்க தனது மகனைத் தூண்டிய காட்சி அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. வீடியோ வைரலான பிறகு, போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் மற்றும் கணவரின் இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அலிராஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் கூறினார்.
வீடியோவை உருவாக்கிய ஒரு மைனரும் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…