தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணம்.. அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்…
மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த நகராட்சி கவுசின்சிலர் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் மரணித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் 11 நகராட்சிகளுக்கு அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் ரேவா எனும் மாவட்டத்தில் ஹனுமனா நகரில் 9 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டி நடந்தது.
அதில் காங்கிரஸ் சார்பில் ஹரி நாராயண குப்தா என்பவர் போட்டியிட்டார். ஆனால் அந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
அப்போது, காலை முதலே, உடல்நல குறைவால் இருந்துள்ளார். தேர்தல் முடிவு கேட்ட பின்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹரி நாராயண குப்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த செய்தி அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடந்து முடிந்த 11 நகராட்சி உள்ளாட்சி தேர்தலில், மாநிலத்தில் ஆளும் பாஜக 7 நகராட்சிகளையும், காங்கிரஸ் 3 நகராட்சிகளையும், ஆம் ஆத்மி 1 நகராட்சியையும் கைப்பற்றியுள்ளது.